சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தஞ்சை பெரிய கோவில் | Thanjai Periya Kovil in Tamil
வரலாற்றில் சிறப்புமிக்க பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பிரசித்பெற்றது.
தஞ்சை பெரிய கோவிலின் பல்வேறு பெயர்கள்
இராஜராஜேஸ்வரம், தஞ்சைப் பெருவுடையார் கோயில், தஞ்சை பெரிய கோயில் மற்றும் பிரகதீஸ்வரர் ஆலயம் என பல்வேறு பெயர்கள் உண்டு. மேலும் இந்து சமயக் கோயில் என தமிழரின் பாரம்பரியச் சின்னத்தை கொண்டுள்ளது. இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் பெயரிடப்பற்றது. கோயிலை மகா சிவன் கோவில் என்று அழைந்து வந்துள்ளனர்.
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள்
இந்தியாவில் அமைந்துள்ள மிகப் பெரிய கோயில்களில் தஞ்சை பெரிய கோவிலும் ஒன்றாகும். தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது. இக்கோயிலானது 7 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2010வது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மதிய வேளைகளில் இந்த கோயிலில் உள்ள கோபுரத்தின் நிழலானது கீழே விழுவதில்லை என்பது ஒரு சிறப்பம்சமாகும். மேலும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.
ராஜராஜ சோழன் இலங்கைக்கு சென்று வந்த பிறகு இந்த கோயிலை வடிவமைத்தார். இலங்களையில் இந்து மன்னர்கள் வேதத்தை தழுவிய இந்து கோயில்களால் கவரப்பட்டதானாலேயே அந்த வடிவமைப்பில் இந்த பெரிய கோயிலை கட்யதாக கூறப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவில் சுற்றுலாத்தலம்
தஞ்சை பெரிய கோவில் வெறும் கோவிலாக மட்டும் பார்க்கப்படாமல் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்தக் கோவில் விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல்,பாரம்பரியம், வரலாறு தொல்லியல் தன்மை ஆகியவை வியக்க வைக்கும் வகையில் பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவில் அமைவிடம்
தஞ்சை பெரிய கோவிலின் தலமானது தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இது புகழ் பெற்ற திருத்தலமாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் இன்றளவும் எப்படி கட்டப்பட்டது என்ற தெளிவான விவரம் தெரியவில்லை. விஞ்ஞானிகளை ஆச்சிரியத்தில் வியக்க வைக்கிறது இக்கோயில்.
தஞ்சை பெரிய கோவில் அமைப்பு
தஞ்சை பெரிய கோவிலின் கோட்டைச் சுவர் வாயிலை அடுத்து உள்ள ஐந்து அடுக்கு கோபுர வாயிலுக்கு கேரளாந்தகன் நுழைவாயில் என்று பெயர். அடுத்து 3 அடுக்குகளுடன் ராஜராஜன் திருவாயில் அமைந்துள்ளன. இதனையடுத்து தென்புறம் இரண்டும் வடபுறம் இரண்டுமாக நான்கு வாசல்கள் உள்ளன.
பெரிய கோயில் கோபுரத்தைவிட பெருவுடையாரின் விமானம் பிரம்மாண்டமானது! சுமார் 216 அடி உயரத்துடன் திகழும் இந்த விமானம், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமானம், தஞ்சைப் பெருவுடையார் கருவறை விமானம்தான்.
இக்கோவிலில் 15 தளங்கள் உள்ளன. உயரம் சுமார் 60 மீட்டர். இது சமவெளிப் பகுதியில் கட்டப்பட்ட கற்கோவில் ஆகும். இக்கோவில் விமானத்தின் உயரம் 216 அடி உயரம் ஆகும்.
தஞ்சை பெரிய கோவில் கோபுரம்
தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தின் மேலே வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல்லானது சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டதென்பது ஒரு பெரிய அதிசாயம். அதை எப்படி மேலே எடுத்துச் சென்றார்கள் என்பது நம்மை வியக்க வைக்கிறது. மேலும் அங்கு சப்தம், ஞானிகளின் ஞான ஆற்றல் மூலம் அந்த பெரிய கல்லை மேலே ஏற்றியிருக்கலாம் என பலரும் கூறுவதுண்டு.
கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கமானது அதிகப்படியான மின்காந்த ஆற்றலை வெளியிடுவதாகவும், அதனால் ஆற்றலானது ஒற்றை கல்லினாலான மேற்கூரைகள் எதிரொளிக்கப்பட்டு, ஒருமுகப்படுத்த படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நேர்மறையான எண்ணங்களால் ஆன இந்த ஆற்றலானது, இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியையும், சாந்தியையும், கொடுப்பதுடன், அவர்களை மனதளவிலும், உடலளவிலும் நன்மை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவிலின் சந்நிதிகள்
- பெருவுடையார் சந்நிதி
- பெரியநாயகி அம்மன் சந்நிதி
- வராகி அம்மன் சந்நிதி
- கருவூர் சித்தர் சந்நிதி
- நடராசர்
- முருகர்
- விநாயகர்
- சண்டிகேஸ்வரர்
தஞ்சை பெரிய கோவிலின் நந்தி சிலை
தஞ்சை பெரிய கோவிலின் நந்தி இராஜராஜன் சோழனால் அமைக்கப்பட்டது, மேலும் மண்டபத்துக்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.
இராஜராஜன் சோழன் வைத்த நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால், அதில் அதிர்ச்சியும், பிரம்மிப்பையும் அடைந்த மராட்டியர்கள் அந்த நந்தி சிலை அகற்றிவிட்டு புதிய நந்தி சிலை வைத்துள்ளனர். இன்றளவும் அந்த பழைய நந்தி சிலை கோயில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. அதன் உயரம் 14 மீட்டரும், நீளம் 7 மீட்டார், அகலம் 3 மீட்டராகும். இந்த நந்தியானது லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியாகும்.
தஞ்சை பெரிய கோவிலின் கட்டிடக் கலை
தஞ்சை பெரிய கோவிலின் கட்டிடக் கலை நிபுணர் குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் மூலம் கட்டப்பட்டதாக அங்கு வைக்கப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிற்பக்கலை, கட்டிடக் கலை ஓவியக் கலை என ஆலயம் சார்ந்த அத்தனை கலைகளையும் சிறப்பாக பறை சாற்றும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது தஞ்சை பெரிய கோவில். கோபுர கட்டமைப்பு, ஆலய கட்டமைப்பு போன்றவை நம்மை வியக்க வைக்கிறது. கற்களை மட்டும் பயன்படுத்தி நுட்பமான முறையில் கட்டப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோவிலானது ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் பழமை மாறாமல் புதுமையாக அதனை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றது.
கோவிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகளில் தெரிகிறது. ஆனால் இதில் ஆச்சரியங்கள் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள்இன்றி சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோயிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது.
தமிழர்களின் தமிழ் மீதான பற்றை சிறப்பிக்கும் வகையில் மாமன்னர் இராஜராஜ சோழன் தாய் மொழியின் அற்புதத்தை தரணி போற்றும் வகையில் அமைத்துள்ளார்.
சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம்18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்.
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள்
தஞ்சை பெரிய கோவிலின் கல்வெட்டுகள் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்திட முடிகிறது. இதனை அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக அளித்த பெருமை மன்னன் இராஜராஜ சோழனையே சாரும். அவர் நினைந்திருந்தால் கல்வெட்டுகளில் அவர் பெயர் மட்டும் பொரித்திருக்க முடியும்.
ஆனால், அவரோ! கோயிலை கட்டியது யார் என்பதில் இருந்து கோவிலுக்குள் பணியாற்றிவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவறையும் பெருமைகொள்ளும் வகையில் அவர்கள் பெயரை கல்வெட்டுகளில் பதிவு செய்திருப்பது இராஜராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், இராஜராஜ சோழனின் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சுரங்கப்பாதை
தஞ்சை பெரிய கோவிலானது பல சுரங்கப் பாதைகளை கொண்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. அந்த காலத்தில் வாழ்ந்த முனிவர்கள், இராஜக்கள், ராணிகள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரகசியமாக செல்ல பயன்படுத்தப்பட்டதாகவும், மேலும் தீபாவளி மகா சிவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்களில் இந்த பாதைகளை பயன்படுத்துவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களை இணைக்கும் இந்த பாதைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவிலின் விழாக்கள்
- பிரம்மோற்சவம்
- ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா
- திருவாதிரை
- சித்திரை திருவிழா
- திருத் தேரோட்டம்
- ஆடிப்பூரம்
- கார்த்திகை
- பிரதோசம்
- சிவராத்திரி