சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
திருவள்ளுவர் – Thiruvalluvar
வாழ்க்கை வரலாறு
வாழ்ந்த காலம் : 2 ஆம் நூறாண்டு முதல் 8 நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம்
பிறப்பிடம் : மயிலாப்பூர், தமிழ் நாடு மாநிலம், இந்தியா
பணி : புலவர்
மனைவியின் பெயர் : வாசுகி
திருவள்ளுவர் பிறப்பு
அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31எ ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமைக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.
திருக்குறள் காலம்
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப்படுகிறது மறைமலை அடிகள் செய்த ஆரய்ச்சியின் பயனாய். தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
உதாரணமாக,
2021+31=2052
அதன்படி பொது ஆண்டு 2021-க்குத் திருவள்ளுவர் ஆண்டு 2052 ஆகிறது.
திருக்குறள் என்னும் அற்புத படைப்பு:
“வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்று அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு தமிழுக்கு புகழை சேர்த்த இவரது மிகச்சிறந்த படைப்பு இந்த திருக்குறள் எனும் நூல் திருக்கறளை படிக்காத தமிழன் இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் நன்னெறி நூலாக உள்ளது.
திருக்குறளின் உன்னதத்தினை உணர்ந்த “ஜி.யு. போப்” என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரடிகளில் உலகின் தத்துவத்தினை தெள்ளத்தெளிவாக கூறி அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு தன் கருத்துகளை அதில் முத்து முத்தாக பொறித்துள்ளார்.
மொத்தம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட இந்த நூல் முறையே “அறத்துப்பால்”, “பொருட்பால்” மற்றும் ”காமத்துப்பால்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
திருக்குறளின் 1330 குறள்களும் மூன்று பால்களும் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அவை,
அறத்துப்பால் – 38 அத்தியாயங்கள் – 4 இயல்கள்
- பாயிரம்
- இல்லறவியல்
- துறவறவியல்
- ஊழியல்
பொருட்பால் – 70 அத்தியாயங்கள் – 7 இயல்கள்
- அரசியல்
- அமைச்சியல்
- அரணியல்
- கூழியல்
- படையியல்
- நட்பியல்
- குடியியல்
காமத்துப்பால் -25 அத்தியாயங்கள் – 2 இயல்கள்
- களவியல்
- கற்பியல்
திருக்குறளின் சிறப்பு பெயர்கள்:
திருக்குறள் ஒரு பொக்கிஷ நூலாக இன்றுவரை கருதப்படுகிறது. அவற்றிற்கு பல சிறப்பு பெயர்கள் உள்ளன. அதனை கீழே குறிப்பிட்டுள்ளோம்.
- திருக்குறள்
- முப்பால்
- உத்தரவேதம்
- தெய்வநூல்
- பொய்யாமொழி
- வாயுறை வாழ்த்து
- தமிழ் மறை
- திருவள்ளுவம்
- முதுமொழி, பழமொழி
- இயற்றமிழ், முதமொழி
திருவள்ளுவரின் இறப்பு:
தமிழ் புலவரான திருவள்ளுவர் இறப்பு குறித்து இன்றுவரை அதிகாரபூர்வமான குறிப்புக்கள் இல்லை ஆனால். மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்த இவர்
ஔவையர் உதவியுடன் மதுரையில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளினை அரங்கேற்றினார் என்றும் நம்பப்படுகிறது.
திருவள்ளுவரின் புனைபெயர்கள் (அ) சிறப்புப்பெயர்கள்:
திருக்குறளினை தந்த திருவள்ளுவருக்கு பல சிறப்பு பெயர்களை பலரும் அளித்துள்ளனர். அதில் முக்கியமானவைகளை கீழே தொகுத்துமு உள்ளோம்.
- செந்நாப் புலவர்
- செந்தாப் போதார்
- திருத்தரு தெய்வத் திருவள்ளுவர்
- தெய்வத் திருவள்ளுவர்
- தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
- தெய்வப் புலவர்
- தேவர்
- திருவள்ளுவர்
- தேவிற் சிறந்த திருவள்ளுவர்
- நாயனார்
- புலவர்
- பெருநாவலர்
- பொய்ய மொழியார்
- பொய்யில் புலவர்
- மாதாநுபங்கியார்
- முதற் பாவலர்
- வள்ளுவ தேவன்(ர்)
- வள்ளுவர்
திருக்குறள் மொழிபெயர்ப்பு பட்டியல்
திருக்கறள், குறள் என்றும் அழைக்கப்படுகிறது. உலகில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட சமயச் சார்பற்ற நூல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 2014 வரையில், இந்த நூல் 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் இதுவரை 57 பதிப்புகள் கிடைக்கின்றன.
திருக்குறள் மொழிப்பெயர்ப்பு:
- இலத்தின் = வீரமாமுனிவர்
- ஜெர்மன் = கிரால்
- ஆங்கிலம் = ஜி.யு. போப் வ.வே.சு.ஐயர், இராஜாஜி
- பிரெஞ்ச் = ஏரியல்
- வடமொழி = அப்பாதீட்சிதர்
- இந்தி = பி.டி. ஜெயின்
- தெலுங்கு = வைத்தியநாத பிள்ளை
அரபு – 1976
வங்காளம் – 1939
சீனம் – 1967
செக் – 1952
டச்சு – 1964
ஆங்கிலம் – 1794
பிஜி – 1964
ஃபின்னிஷ் – 1972
இந்தி – 1924
– மேலும் மொழிகள் பல
திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்.
- ஞானவெட்டியான் – 1500 பாக்கள்
- திருக்குறள் – 1330 பாக்கள்
- ரத்தினசிந்தாமணி – 800 பாக்கள்
- பஞ்சரத்தனம் – 500 பாக்கள்
- கற்பம் – 300 பாக்கள்
- நாதாந்த சாரம் – 100 பாக்கள்
- நாதாந்த திறவுகோல – 100 பாக்கள்
- வைத்திய சூஸ்திரம் – 100 பாக்கள்
- கற்ப குருநூல் – 50 பாக்கள்
- முப்பு சூஸ்திரம் – 30 பாக்கள்
- வாத சூஸ்திரம் – 16 பாக்கள்
- முப்புக்குரு – 11 பாக்கள்
- கவுன மணி – 100 பாக்கள்
- ஏணி ஏற்றம் – 100 பாக்கள்
- குறுநூல் – 51 பாக்கள்
திருவள்ளுவரின் நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலை:
வள்ளுவர் கோட்டம்
இன்றைய சென்னையில் உள்ள ஒரு முக்கிய பகுதி இந்த “வள்ளுவர் கோட்டம்” இந்த வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்காக ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குறள் மண்டபத்தில் திருக்குறளின் அனைத்து குறள்களும் பதிக்கப்பட்டுள்ளன. இன்றுவரை தமிழக அரசு அதனை சிறப்பாக பேணிக்காத்து வருகிறது.
வள்ளுவரின் சிலை
தமிழக மற்றும் இந்திய தேசத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இவரது திருஉருவ சிலை நிருவப்பட்டுள்ளது. அவரது 133 அதிகாரிங்களின் நினைவாக அந்த சிலையானது 133 அடிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையினை செய்த சிற்பியின் பெயர் கணபதி ஸ்தபதி.
வள்ளுவரின் கோயில்
திருவள்ளுவருக்காக அவரது பிறப்பிடமாக கருதப்படும் மயிலாப்பூரில் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இன்றுகூட அதனை நீங்கள் காண முடியும் அந்த கோவிலானது மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோயில் அருகில் உள்ளது.
மேலும் பல நாடுகளின் வள்ளுவரின் புகழினை உணர்ந்து பல சிலைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருக்குறளைப் பற்றிய சில அரிய தகவல்கள்:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திருக்குறள்.
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
- திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 380
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
- திருக்குறள் காமத்துப்பால் உள்ள குறட்பாக்கள் -250
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் – 42,194
- திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
- திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் – அனிச்சம், குவளை
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஔ
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
- திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் – ளீ,ங
- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
- திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது.
- ஏழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது
- திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது
- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துளளனர்
- திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.