சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
நல்ல தூக்கம் வர செய்ய வேண்டியவை | Tips For Good Sleep In Tamil
தூக்கம் ஒரு மனிதருக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்கை முறையை உண்டாகும்.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் முழுமையாக தூங்க வேண்டும். முடிந்த வரை இரவு 10 மணிக்கு உறங்கி காலை 5 அல்லது 6 மணிக்கு எழுந்திரிக்க வேண்டும் . இதை வாடிக்கையாக வைத்திருக்க வேண்டும்.இரவு உறங்குவதற்கு 2 அல்லது 3 மணிநேரம் முன்பாக உணவு அருந்துவது நல்லது.
அது மட்டும் இன்றி உறங்குவதற்கு முன்பாக வாழைப்பழம் அல்லது பால் குடிப்பது இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தை தூண்டும். அதேபோல் இரவு நேரத்தில் பிரியாணி, மைதா போன்ற கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் இரவு நேரத்தில் செரிமானம் செய்யமுடியாமல் தூக்கமானது கெடும். தூங்குவதற்கு 4 அல்லது 5 மணி நேரத்துக்கு முன்பு டீ, காபி குடித்துவிடவேண்டும். தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு மென்மையான இசை கேட்பது நம்மை இலகுவாக வைத்துக்கொள்ளும் அதுமட்டும் இன்றி நல்ல துக்கத்தையும் இது வரவழைக்கும்.
இரவு நேரம் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து மாலை நேரத்தில் செய்வது நல்லது. நாம் உறங்கும் படுக்கை அறையானது இருட்டாகவும் அல்லது இருட்டு சிலருக்கு பயமாக இருந்தால் சிறிய விளக்கு எறிவது நல்லது. அந்த அரை மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் மேலும் குளிர்ச்சியாக அல்லது வெப்பம் இல்லாமல் இருக்க வேண்டும். காலை எழுந்தவுடன் நாம் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்ல சுறுசுறுப்பான நாளாக அமையும். அதேபோல் காலி எழுந்து ஒரு மணி நேரத்திலும் காலை உணவை சாப்பிட வேண்டும்.
சிலர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்தால் அந்த நேரத்துக்கு தகுந்தாற்போல் நாம் இங்கு வேலை செய்ய வேண்டும் .அது Shift கணக்கில் மாறுபடும் இதனால் சிலர் ஒரு நாளைக்கு தூக்கத்தை 3 மணி நேரம் மட்டும் கூறுகின்றனர் அது நல்லதுக்கு இல்லை. தொடர்ச்சியான தூக்கம் மிக அவசியம் அது பகலாக கூட இருக்கலாம். தூங்கும்போது ஒரு மணி நேரத்துக்கு முன்பு மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.காலை நேரமாக எந்திரித்தால் இரவு நேரம் தானாக துக்கம் வரும்.
மேலே கூறப்பட்ட அனைத்தையும் நாம் கடைபிடித்து வந்தால் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு வழிவகுக்கும்