சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
திருப்பூர் அருகே தந்தையின் கொடூர செயல்..!
திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோ பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த 28ம் தேதி நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கூலிப்படையை ஏவி கொலை செய்தது அவருடைய தந்தை தான் என போலீசார் விசரானையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விசரானை நடத்தி வந்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் பாலசுப்பிரமணியத்தின் தந்தை உள்பட 2 பேரை கைது செய்தனர், மேலும் இதை பற்றிய விசாரணையில் பாலசுப்பிரமணியம் மதுவுக்கு அடிமையாகி, பணத்தை ஊதறிதனமாக செலவு செய்ததால் தன் மகளுக்கு சொத்து எதுவும் இருக்காது என்று கருதி தந்தை கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளதாக போலீசார் விசரானையில் தெரியவந்துள்ளன. தந்தையே தனது மகனை சொத்துக்காக கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.