சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பயணம் மனித வாழ்க்கைக்கு தேவையான ஒன்று | Importance of Travel in Tamil
பயணம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது அது உடல் ரீதியாகவும் சரி மன ரீதியகவும் சரி நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அது மட்டும் இன்றி இன்று நாம் பயணம் செய்ய பல வழிகள் வந்து விட்டது வான்வழியாக பயணிப்பது, நீர்வழியாக பயணிப்பது, தரை வழியாக பயணிப்பது நாம் நினைக்கும் இடத்துக்கு எந்த விதமாக வேண்டுமானாலும் செல்லலாம் என்பது இது மனிதனுக்கு கிடைத்த மிக பெரிய வரம் முன்பு மனிதன் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நடந்து அல்லது அவர்கள் வைத்திருக்கும் கால்நடைகளை பயன்படுத்தி பயணிப்பர் உதாரணத்துக்கு குதிரை, மாடு மற்றும் பல உயிரினங்கள் பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொண்டனர் இது அவர்களுக்கு சிறிய பயணமாக இருந்தாலும் அவர்களுக்கு வெகு நாட்கள் அந்த பயணம் மேற்கொண்டனர்.
தற்போது இருக்கும் சூழலில் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் இந்த உலகத்தில் எந்த மூளைக்கும் மனிதனால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் குறைந்தபட்சம் 2 நாட்களுக்குள் சென்றுவிடலாம் அவ்வாறு இன்று விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. அன்று ஒரு பயணம் ஆனது ஊர் திருவிழா அல்லது துக்க நிகழ்ச்சிகள் போன்ற விசயத்துக்கு தான் பயணம் மேற்கொண்டனர்.
தற்போது பயணம் எளிமையானது அது பலரும் பல காரணத்துக்கு பயணம் செய்கின்றன பயணம் மேற்கொள்வதால் பல நன்மைகளும் உள்ளது. பயணம் மேற்கொண்டால் நாம் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும், மனஉளைச்சலில் சிக்கி கொள்ளும் நபர்கள் தாராளமாக பயணம் மேற்கொள்வது சிறந்தது அவர்களுக்கு மனா ரீதியாக நல்ல ஒரு அமைதியை தரும், சிலர் கற்பனைத்திறன் வளர்வதற்கும் புதிதாக ஏதாவது யோசனை வர வேண்டும் என்றால் பயணம் மேற்கொள்வர், பயணம் மேற்கொள்ளும்போது நமக்கு ஒரு விதமான நிறைவையும், மகிழ்ச்சியும் தரும், மன அழுத்தம் ஏற்பட்டால் அதில் இருந்து நம்மை மீட்டெடுக்கும்.
பயணங்கள் மேற்கொள்வதால் நாம் பல இடங்களுக்கு செல்கின்றன இதனால் நாம் நமக்கு பரிச்சையம் இல்லாத பலதரப்பு மக்களை சந்திக்கும்போது நமது எண்ணங்கள் மற்றும் நமது எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். இதனால் நமக்கு நாம் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். சிலர் வருட முழுக்க வேலை அல்லது தொழில் என்று இருப்பவர்கள் எதாவது ஒரு நாள் சுற்றுலா செல்லலாம் என்று முடிவு செய்து அதன்படி திட்டமிட்டால் அது பெரும்பாலான நேரங்களில் அது தோல்வியடைந்துவிடும். பிறகு சொன்னதை செய்யவேண்டும் என்ற நிரபந்தத்திற்கு அருகில் அடிக்கடி போன இடத்துக்கே குடும்பத்தினரை கோடி சென்று சுற்றுலாவை முடித்துக்கொள்வர்.
சுற்றுலா என்பது வெறும் மனிதனை சார்ந்த விஷயம் மட்டுமின்றி தற்போது அது நாட்டின் பொருளாதாரத்திலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது நமது நாட்டில் சுற்றுலாவுக்கு என தனி துறை மத்திய அரசும் மாநில அரசும் வைத்துள்ளது. அதுபோல் சுற்றுலாவை ஊக்குவிக்க அரசு பல விளம்பங்கள் மாற்றும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பல வழிமுறைகள் பயன்படுத்தி மத்திய அரசும் மாநில அரசும் சுற்றுலாவை மேம்படுத்தி அதன் மூலம் வருமானம் ஈட்டா முயற்சிக்கின்றன.
மேலு ஒரு பயணத்தி நாம் நன்கு சக்கர வாகனத்தில் மேற்கொண்டால் நாம் பல இடத்தில செலவுகள் மேற்கொள்வோம் உதாரணத்துக்கு நாம் காரில் பயணம் செய்யும்போது முதலில் வாகனத்துக்கு தேவையான எரிபொருள் நிரப்புவோம், பிறகு அங்கு இருக்கும் ஏதாவது உணவகத்தில் உணவு அருந்துவோம், மேலும் இரவு நேரம் தங்குவதற்கு உறவினர்கள் இருந்தால் உறவினர்கள் வீட்டில் தங்கி கொள்ளலாம் அல்லது கண்டிப்பாக விடுதி எடுத்து தான் தங்கும் நிலைமை ஏற்படும். பிறகு போகும் வழியில் உள்ள சுங்கச்சாவடிக்கு பணம் செலுத்த வேண்டும், திரும்பி நாம் வீடு திரும்பும்போது நாம் சென்ற இடத்தில எந்த பொருள் பரிசித்துப்பெற்ற பொருளோ அதை நாம் சென்றதுக்கு நினைவாக வாங்கி வந்து வீட்டில் வைப்போம். தற்போது எல்லாம் கைபேசியில் இருப்பதால் அதை வைத்து நமக்கு தேவைப்படும் தகவல்களை பெறலாம். இதனால் தற்போது சுற்றுலா இடத்தில் இருக்கும் guide என்பவர் இல்ல்லாமல் போய்விட்டார் இது ஒரு சுற்றுலா மேற்கொண்டால் இதனை இடத்தில நாம் செலவு நாட்டுக்கு பெரும் உதவியா இருக்கிறோம் இது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் என அனைத்தும் இந்த சுற்றுலாவில் இருக்கும்.
மேலும் சுற்றுலா பல வகைப்படும்.அதை பற்றி விரிவாக பார்க்கலாம்
பொழுதுபோக்கு சுற்றுலா:
இது மிகவும் பொதுவான வகையாகும் இது பெரும்பாலும் மக்கள் தனது அன்றாட வாழ்க்கையில் இருந்து விலகி இருக்க செல்பவர்கள் விளையாட்டு பூங்கா, தீம் பார்க், கடற்கரை அருகில் உள்ள மலைகளுக்கு செல்வது இது போன்ற செல்வார்கள் இது பெரும்பாலும் அனைவரும் செல்லக்கூடிய சுற்றுலா ஆகும்.
கலாச்சார சுற்றுலா:
இது ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒரு இடத்தில உள்ள கலாச்சாரம் மற்றும் அந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வியல் பற்றிய தெரிந்து கொள்வார்கள் அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் அவரது நம்பிக்கை பற்றி நன்கு அறிந்து அவர்களது விழாக்களில் பங்கேற்பது. அவர்களுடன் இருந்து அவர்கள் வாழ்க்கை முறை தெரிந்துகொள்வது. இடஙக வகை சுற்றுலாவை சேரும்.
இயறக்கை சுற்றுலா
இந்த வகை சுற்றுலா மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் இயறக்கை ஆர்வலர்களாக இருப்பார்கள் இவர்கள் காடுகளில் இருக்கும் வன விலங்குகள், பறவைகள், மற்றும் இயற்கையின் நடுவே அமைதியை அனுபவிக்க ஆசைப்படுவார்கள். இதனால் இயற்கை மீது ஆர்வம் உள்ளவர்கள் இவர்களால் இயற்ககைக்கும் பெரிதும் ஆபத்து இருக்காது. மேலும் நாகு வாழும் மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.
இன்ப சுற்றுலா
தற்போது மக்கள் பெரும்பாலும் கணிப்பொறி பணிகளில் தான் வேலை செய்கின்றன இவர்களுக்கு உடல் உழைப்பு இல்லை என்றாலும் அறிவு சார்ந்து விசியங்களை மேற்கொள்கின்றன உடல் ரீதியாக வரும் பாதிப்புகள் விட மன ரீதியான பிரச்சனைகள் அதிகம் இதில் இருந்து வெளிவர அவர்கள் கண்டிப்பாக சுற்றுலாவை தான் மேற்கொள்வார்கள் அவர்கள் மன அமைதிக்கு வேண்டி செல்வார்கள் இவர்கள் பெரும்பாலும் யோகா அல்லது தியானம் செய்ய அமைதியான இடத்துக்கு செல்வார்கள்.
விளையாட்டு சுற்றுலா
இது மேற்கொள்பவர்கள் விளையாட்டின் மீது பெரும் ஆர்வம் அல்லது அதை நேரில் கண்டு அனுபவிக்கவும் ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிப்பார்கள் அதாவது ஒருவகை விளையாட்டு சில இடத்தில மட்டும் தான் நடத்தப்படும் உதாரணத்துக்கு பணிசார்க்கு போட்டி பனிபொழியும் நாடுகளில் மட்டும் தான் நாடாகும் அதும் குறிப்பிட்ட பனிக்காலத்தில் மட்டும் தான் நடக்கும் இதை நேரில் பார்ப்பதற்கு ஆர்வம் உள்ள சிலர் அத இடத்துக்கு செல்வார்கள், மேலும் கடலில் அலைகைளை விளையாடுவது, கடலில் நடக்கும் போட்டிகள் இது குறிப்பிட்ட இடத்தில் தான் நடக்கும் இதை காண மேற்கொள்ளும் சுற்றுலா தான் விளையாட்டு சுற்றுலா எனப்படும்
மத அல்லது ஆன்மிக சுற்றுலா:
இந்த வகை சுற்றுலா என்பது மதம் சார்ந்து தனது மாதத்தில் போற்றப்படும் புன்னியஸ்தலம் சென்று அங்கு இருக்கும் கடவுளை வழிபடுவது போன்ற காரத்துக்கு செல்வது ஆன்மீக சுற்றுலா எனப்படும் மேலும் கோவில்களுக்கு செல்வது மத விழாவில் கலந்து கொள்வது. இதுபோன்ற பயணங்களை மத சுற்றுலா அல்லது ஆன்மிக சுற்றுலா எனப்படும்.
மருத்துவ சுற்றுலா
இந்த வகை சுற்றுலா மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் நோயாளிகளாக தான் இருப்பார்கள் அதாவது தந்து உடல் நலம் குன்றிய இருப்பவர்கள் அல்லது தனது உடல் நாளைக்கு சிகிச்சை மேற்கொள்ள அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து அந்த வசதிகள் இருக்காது இதனால் சிகிச்சை மேற்கொள்ள வேறு ஊருக்கு அல்லது வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வார்கள் உதாரணத்துக்கு இதய அறுவைசிகிச்சை மேற்கொள்ள சிலர் வெளிநாடுகளில் அதிநவீன வசதிகள் இருப்பதால் சிலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றன இந்த வகை பயணம் மருத்துவ பயணம் எனப்படுகிறது
சாகச சுற்றுலா
இந்த வகை சுற்றுலா செல்பவர்கள் விளையாட்டை பார்ப்பதற்கு செல்லாமல் இவர்கள் அதில் பங்கு பெறுவார்கள் குறிப்பாக அவர்கள் சாகச நிறைந்த விளையாட்டுகள் செய்வார்கள் அவர்கள் மேற்கொள்ளும் பயணம் வழக்கமாக இல்லாமல் யாரும் பார்க்காத இடத்துக்கு செல்வது மலையேறுவது, பாரச்சூட்டில் பயணம் செய்வது, விமானத்தி இருந்து குதிப்பது, உயரமான இடத்தில் இருந்து கயிறு கட்டி குதிப்பது, மேலும் வாகனங்களை மலைப்பாதையில் ஓட்டுவது இது போன்ற சாகச நிகழ்வுகள் செய்வது இது போன்ற பயணம் மேற்கொள்பவர்கள் சாகச பயணம் எனப்படும்.
இதுவே பொதுவாக மக்கள் மேற்கொள்ளும் சுற்றுலா ஆகும் எனவே சுற்றுலா என்பது மக்களுக்கு ஒரு தேவைப்படும் மருந்து போன்ற சமாச்சாரமாகும் இது அவர்களுக்கு பல இடங்களில் சில வலிக்கும் மன நிம்மதிக்கும் வழி வகுக்கும். எதுவாயினும் அளவுக்கு மிஞ்சி நஞ்சு ஆகிவிடாமல் பர்த்துக்கொள்வது நல்லது.