சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

இன்றைய வானிலை நிலவரம் | Today Weather Report In Tamil
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் இன்று தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனீ, மற்றும் திண்டுக்கல் போன்ற 5 மாவட்டங்களில்,இன்னும் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னை நகரத்தில் கடந்த 48 மணி நேரத்துக்கு வானம் ஒரு அளவுக்கு மெகா மூட்டத்துடன் காணப்படும், அதே போல் நகரத்தின் ஒரு சில இடத்தில மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னையில் அங்கங்கே மழை பெய்ததையடுத்து சென்னை மக்கள் மகிழ்ச்சி.
இதே நிலைமையானது நாளை மற்றும் நாளை மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. 8 மற்றும் 9ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல இன்று முதல் வரும் 10 தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.