சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
வாகன பிரச்சானையில் உயிர் இழப்பு..!
விழுப்புரம் மாவட்டம் தி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் அருண் 21 வயது நிரம்பிய இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா காலை கல்லூரியில் B.A வரலாறு பயின்று வருகிறார். சம்பவத்தன்று இவரது இரு சக்கர வாகனம் திருட்டு போனது அடுத்து இவர் அருகில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் அவருக்கு 4 பேர் மீது சந்தேகம் உள்ளதாக கூறி குரல் பதிவை ஆதாரமாக புகார் தெரிவித்துள்ளார் வீரமணி, சரத்ராஜ், சத்தியா மற்றும் கீர்த்திவர்மன். ஆகியோரை அழைத்து போலீசார் விசாரித்தனர் அப்போது அவர்கள் திருடவில்லை என்று கூறியதும் போலீசார் அவர்களை மிரட்டி திருப்பி அனுப்பினார். ஊர்க்கு திரும்பிய 4 பேர் மேலும் சிலரை சேர்த்துக்கொண்டு அவரை தொடர்புகொண்டு வண்டியை திருடியது நங்கள் தான் திருப்பி தருகிறேன் என்று சொல்லி அவரை வீட்டை விட்டு வெளிய வர சொல்லி இருக்கின்றன அவரும் வண்டி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார்.
ஆனால் அவர்கள் அருணை பணப்பாக்கம் ஏரிக்கரையில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து அவரின் ஆடையை உருவி உள்ளாடையுடன் அதே ஏரியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் கொலை செய்துவிட்டு சத்தியா என்பவர் போதையில் ஊருக்குள் வந்து உளறி உள்ளார் இதை கேட்ட ஊர் மக்கள் அவர்களை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர் பிறகு தீயணைப்பு துறையினர் உதவியுடன் அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த கொலையில் சில நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக மாணவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சமந்தபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் உடலை குடும்பத்தினர் முன்னிலையில் தான் பிரேத பரிசோதனை நடக்க வேண்டும் என்று கூறி மாணவரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.