சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
விநாயகர் சதுர்த்தி விழாவின் விளக்கம் | Vinayagar Chaturthi in Tamil
விநாயகரின் வரலாறு
சிவபெருமான் ஒரு சமயம் வெளியே சென்றிருக்கும் போது பார்வதிதேவி நீராடச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் அப்பொழுது அங்கு காவலுக்கு யாரும் இல்லை என்றதால் ஒரு சந்தன குழம்பை எடுத்து உருவமா உருவாக்கி அந்த உருவத்திற்கு உயிரூட்டினார் . அந்த உருவம் ஒரு குழந்தையாக மாறியது அந்த குழந்தையிடம் நான் நீராடுவதற்கு செல்வதாக கூறி யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று கூறி விட்டு சென்றால் பார்வதி .
அந்த சமயம் அங்கு வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ள அனுமதிக்காததால் கோபப்பட்ட சிவபெருமான் பிள்ளையாரின் தலையை துண்டாகி விட்டு உள்ளே சென்று விட்டார் . பின்னர் பார்வதி தேவி குளித்து முடித்து வெளியே வந்து பார்த்தபோது தலை இல்லாமல் கிடந்த பிள்ளையாரைப் பார்த்து கோபமும் ஆக்ரோஷமும் அடைந்த பார்வதி தேவி தான் உருவாக்கிய பிள்ளையாரை சிவபெருமானே சிதைத்துவிட்டார் என்று அறிந்து காளியாக மாறி மூவுலகத்தையும் அளிக்கத் துவங்கினாள்.
இதைப் பார்த்த தேவர்கள் பயந்து சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியை சாந்தப்படுத்துவதற்காக முடிவெடுத்த சிவன் தன்னோட பூதகணங்களை அழைத்து காட்டுக்குள் வடக்கு திசையில் சென்று முதலில் தென்படும் ஜீவராசியின் தலையை வெட்டி கொண்டு வர வேண்டும் என்று சிவன் உத்தரவிட்டுள்ளார் .
இதனை அடுத்து சிவ பூத கணங்கள் வடக்குத் திசையாக சென்றுள்ளனர் இதில் அவர்கள் முதலில் யானையை பார்த்து அதன் தலையை வெட்டி கொண்டு வந்துள்ளனர் பின்னர் அவர்கள் கொண்டு வந்த யானையின் தலையை பிள்ளையாரின் உடம்போடு வைத்துள்ளார் சிவபெருமான். பின்னர் அந்த உருவத்திற்கு உயிர் ஊட்டி உள்ளார் சிவபெருமான்.
இதை பார்த்த பார்வதி தேவி தன்னுடைய பிள்ளைக்கு உயிர் மீண்டும் வந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.இதனை அடுத்து கோபத்தின் உச்சியில் காலியாக இருந்த பார்வதிதேவி கோபம் தணிந்து சாந்த நிலைக்கு மாறினார்
அப்போது சிவபெருமான்பிள்ளையாருக்கு கணேசன் என்று பெயர் சூட்டினார் பின்னர் தனது பூத கணங்களுக்கு தலைவராக விநாயகரை ஆக்கினார் .
என நாரத புராணத்தில் விநாயகர் பிறப்பைப் பற்றி கூறியுள்ளனர் .இந்த நிகழ்ச்சி நடந்தது ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியன்று அன்றிலிருந்து இன்று வரை விநாயகர் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தை விநாயகர் சதுர்த்தி என்று சிறப்பாக சந்தோஷமாக கொண்டாடி வருகின்றோம்
விநாயகரை எதனால் நதியில் கரைக்கின்றனர்
சிவனோட முதல் மனைவி சதிதேவி யாககுண்டத்தில் விழுந்து இறந்த பிறகு .
பர்வதராஜன் அவருடைய மகளான பார்வதிதேவி சிறுவயதில் இருந்து சிவனை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று வாழ்ந்து வந்தால் .
அப்போது பார்வதியின் தந்தை பர்வதராஜன் பார்வதி தேவியிடம் ஈசனை கல்யாணம் செய்ய வேண்டுமென்றால் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற் கொள்ளுமாறு கூறினார்.
அவர் சொன்னபடியே மண்ணால் ஒரு விநாயகர் உருவத்தை ஆகம விதிப்படி அந்த விநாயகர் சிலைக்கு வழிபாடு செய்து வந்திருக்கின்றார்.
உங்களுக்கு இந்த இடத்தில் ஒரு யோசனை வரலாம் சிவன் பார்வதி திருமணத்துக்குப் பிறகுதான் பார்வதி விநாயகர் சிலையை வடிவமைத்தால் ஆனால் எப்படி கல்யாணத்திற்கு முன்னாடியே விநாயகர் சிலையை வழிபாடு செய்து வந்தார் என்ற யோசனை உங்களுக்கு வரக்கூடும்.
மும்மூர்த்திகளான சிவன் , விஷ்ணு , பிரம்மா உருவாவதற்கு முன்னாடியே . முன் முதல் கடவுளான விநாயகர் உருவானதாக சில புராணங்களில் கூறப்பட்டு வருகிறது. அதன்படி விநாயகரை பார்வதி தேவி சிவனை மணம் முடிப்பதற்காக பிரார்த்தனை செய்து வந்ததாக சில புராணங்களில் கூறப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜை செய்து பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்து வந்துள்ளார் பார்வதி இதன்பிறகு மண்ணால் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலையை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து உள்ளார்.
அந்த 15 நாள் தினமும் பூஜை செய்து விரதம் இருந்ததின் பலனாக பார்வதி நினைத்தபடியே சிவனை மணம் முடித்தார். இந்த வழிபாட்டு முறையை தான் பிற்காலத்தில் தொடரப்பட்டு தற்போதும் விநாயகரை வைத்து பூஜை செய்து பின்னர் நதியில் கரை கின்றோம்
விநாயகர் எடுத்த 12 அவதாரங்கள்
- கஜானன அவதாரம்
- வக்ரதுண்ட அவதாரம்
- விக்ன விநாயகர்
- மகோத்கட அவதாரம்
- சிந்தாமணி அவதாரம்
- மயூரேச அவதாரம்
- பாலச்சந்திர கணபதி அவதாரம்
- தூமகேது விநாயகர் அவதாரம்
- கணேச அவதாரம்
- லம்போதர அவதாரம்
- துண்டி விநாயகர் அவதாரம்
- வல்லபை விநாயகர்
கஜானன அவதாரம்
இந்த அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால் யானை முகத் தோடு மோசிகனை தனது வாகனமாக ஏற்றுக் கொண்டது இந்த அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் தான் விநாயகர் கஜமுகன் அசுரனை விநாயகர் வதம் செய்தார், இந்த அசுரன் ஒற்றைக்காலில் தவம் செய்து சிவனிடம் என்னை யாராலும் அழிக்க முடியாது என்ற அவர் வரத்தை பெற்றுக்கொண்டான் இந்த வரத்தை வைத்து தேவர்களை தினமும் காலை ,மாலை , இரவு மூன்று வேளையும் 108 தோப்புக்கரணம் போட வைத்து கொடுமைப் படுத்தினான் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர் பின்னர் சிவன் விநாயகரை அழைத்து அந்த அசுரனை அழித்து விடு என்று ஆணையிட்டார் இந்த ஆணையை ஏற்ற விநாயகர் அவனிடம் அவன் அழிக்க முயற்சி செய்தார் அப்போது விநாயகர் அத்தனை வகையான ஆயுதங்களையும் அவன் துவம்சம் செய்துவிட்டான் பின்னர் விநாயகர் தன் தந்தத்தை உடைத்து அதை எறிந்தார் இதன்பிறகு அவன் நிலை குலைந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டான் இதன்பிறகு விநாயகர் அந்த அசுரனை தனது மோசிக வாகனமாக மாற்றினார்
மக்கள் விநாயகருக்கு தோப்புக்கரணம் போடும் காரணங்கள்
இந்த சம்பவத்திற்கு பிறகு அனைத்து தேவர்களும் நிம்மதியடைந்தனர் அனைத்து தேவர்களும் வந்து விநாயகரிடம் அசுரனிடம் போட்ட தோப்புக் கரணத்தை விநாயகரிடம் போட்டனர் இதுதான் நாளடைவில் இப்போதும் விநாயகர் கோவிலுக்கு சென்ற மக்கள் தோப்புக்கரணம் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்
வக்ரதுண்ட அவதாரம்
இந்த அவதாரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த அவதாரத்தில் தான் விநாயகரின் தும்பிக்கை வளைந்த நிலையில் இருக்கும். இந்த அவதாரம் எதற்காக விநாயகர் எடுத்தார் என்றால் காசியில் ஒரு அரக்கன் தேவர்களை மிகக் கொடுமை செய்து வந்தான் அப்போது அந்த தேவர்கள் பார்வதியிடம் முறையிட்டனர் இதையடுத்து பார்வதி விநாயகரிடம் அந்த அசுரனை அளிக்குமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து விநாயகர் அந்த அசுரனை அழிக்க தான் எப்போதும் பயன்படுத்தும் மோசிக வாகனத்தை பயன்படுத்தாமல் சிங்கத்தை தனது வாகனமாக பயன்படுத்தி மிக ஆக்ரோஷமாக அந்த அசுரனை போரிட்டு வென்றார் இதனால் இந்த அவதாரத்திற்கு வக்ரதுண்ட அவதாரம் இன்று பெயர் வர காரணம் ஆகும்
விக்ன விநாயகர்
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு நல்லது செய்ததை நாம் பகவத்கீதையில் பார்த்திருப்போம் அதுபோல் விநாயகர் நல்லது செய்த கணேச கீதை பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம்,விநாயகர் ஒரு மன்னனின் மகனாகப் பிறந்து அந்த மன்னரின் ஆணவத்தை அடக்கினார் , கிருஷ்ணன் எவ்வாறு அர்ஜுனுக்கு இதுதான் உலகம் என்று எடுத்து உரைத்தது போல் மன்னருக்கு விநாயகர் நல்லது செய்ததை இதுதான் கணபதி கீதை அல்லது கணேச கீதை என்று அழைக்கின்றனர் அந்த மன்னரின் விக்னங்களை அடக்கியதால் விக்ன விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்
மகோத்கட அவதாரம்
இந்த அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு நாள் விநாயகரும் முனிவரும் தவம் செய்து கொண்டிருந்தனர் பின்னர் தவம் முடித்து நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு இடைமறித்த இரண்டு அரக்கர்கள் அவர்களை செல்ல விடாமல் தடுத்துள்ளனர் .
இதனை அடுத்து விநாயகர் தலையிலிருந்த கலசத்தில் உள்ள தேங்காயை எடுத்து இரண்டு அரக்கர்களின் தலையில் உடைத்து அந்த அரக்கனின் தலையை சிதறடித்தார் விநாயகர்
இதனால்தான் நாம் எப்பொழுது எந்த ஒரு காரியம் தடைபட்டாலும் வினாயகரை நினைத்து தேங்காய் உடைப்பது வழக்கமாக செய்து வருகின்றோம்
சிந்தாமணி அவதாரம்
இந்த அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு நாள் ஒரு அரசன் காட்டு வழியாக தன் படைகளுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது சிறிது ஓய்வு எடுப்பதற்காக அங்கு அருகில் உள்ள ஒரு சித்தரின் வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுத்துள்ளார்
அந்த சித்தரின் பெயர் கபில சித்தர், அந்த சித்தர் அவர்களுக்கு சிறிது நேரத்தில் அறுசுவை உணவு வழங்கினார் .அந்த அறுசுவை உணவை ஏற்றுக் கொண்ட அரசர் சிறிது நேரம் கழித்து இத்தனை பேருக்கு எவ்வாறு சிறிது நேரத்தில் அறுசுவை உணவு ஏற்பாடு செய்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சித்த தன்னிடம் சிந்தாமணி என்ற ஒரு அபூர்வமான ஆபரணம் இருக்கின்றது இந்த ஆபரணம் இந்திரன் இடமிருந்து நான் பரிசாக பெற்றுக் கொண்டேன்.அந்தப் பரிசாகப் பெற்றுக் கொண்ட சிந்தாமணி அட்சயபாத்திரம் போல் உணவை அல்ல அல்ல வழங்கிக் கொண்டே இருக்கும் என்று கூறினார் .
இதனை அறிந்த அரசன் அவரிடமிருந்து அந்த சிந்தாமணியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார் இதனை அறிந்த முனிவர் மிகவும் கவலையுடன் துர்கா தேவி இடம் முறையிட்டுள்ளார், இதற்கு தேவி விநாயகரை நினைத்து விரதமிருந்து அவரிடம் உங்களின் குறையை கூறுங்கள் கண்டிப்பாக விநாயகர் அதை நிவர்த்தி செய்வார் என்று கூறியுள்ளார் கபில முனிவரும் விரதமிருந்து விநாயகரிடம் முறையிட்டுள்ளார், இதனைக் கேட்ட விநாயகர் அந்த அரசனை துரத்திச் சென்று அவனிடம் போர் புரிந்து அந்த சிந்தாமணியை மீட்டுக் கொண்டுவந்து கபில முனிவரிடம் கொடுத்துள்ளார் .
இதற்கு கபில முனிவர் இந்த ஆபரணம் தன்னிடம் இருப்பதை விட தங்களிடம் இருப்பதே மேல் என்று நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் விநாயகர் என்று கூறினார் இதனால்தான் விநாயகருக்கு சிந்தாமணி அவதாரம் என்று பெயர் வரக் காரணமாக இருக்கிறது
இந்தப் போர் நடைபெற்ற இடம் புனேவில் இருக்கின்ற தேவூர் என்ற இடம்
மயூரேச அவதாரம்
இந்த அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால் முருகனின் வாகனமான மயில் வாகனம் இருப்பதுபோல் ஒரு மயில் வடிவிலான ஒரு அசுரன் இந்த பூமியை வதம் செய்து கொண்டிருந்தான் இந்த செய்தியை கேட்ட பார்வதி விநாயகரிடம் அந்த அரக்கனை அளிக்கும்படி உத்தரவிட்டார் .
இதனை ஏற்றுக்கொண்ட விநாயகர் அந்த மயில் வடிவிலான அரக்கனை அழித்து தனது வாகனமாக விநாயகர் பயன்படுத்தியதால். இந்த அவதாரத்தின் பெயர் மயூரேச அவதாரம் என்று பெயர் வர காரணம் ஆனது
பாலச்சந்திர கணபதி அவதாரம்
இந்த அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு அக்னி அரக்கனை விநாயகர் வதம் செய்து அந்த அக்னி அரக்கனை முழுமையாக விநாயகர் விழுங்கி விட்டார் எனவே அந்த அக்னி அரக்கனின் வெப்பம் தாங்க முடியாத விநாயகர் வெப்பத்தைத் தணிவதற்காக சந்திர பகவானே எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொள்வார் இதனால்தான் இவருக்கு பாலச்சந்திர கணபதி அவதாரம் என பெயர் வந்தது
தூமகேது விநாயகர் அவதாரம்
இந்த அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால் . தூமகேது அசுரன் புகை வடிவிலான அசுரன் மக்களை வதம் செய்து வந்துள்ளான். இவனை அளிப்பதற்காக விநாயகர் ஒரு அரச குடும்பத்தின் மகனாக பிறந்துள்ளார், இதை முன்கூட்டியே அறிந்த அசுரன் . அந்த சிறுவனை அழிப்பதற்காக புகை வடிவிலான அளிக்கும் புகையினை அனுப்பியுள்ளார் விநாயகர் தூமகேது அனுப்பிய அத்தனை புகை இணையும் உள்வாங்கி அவன் பலம் இழந்து போன பிறகு அவனை வதம் செய்தார்
கணேச அவதாரம்
வலி என்ற ஒரு அசுரனை வதம் செய்ய சிவபெருமானின் பூதகண தலைவன் விளங்கக்கூடிய விநாயகரை வதம் செய்யச் சொல்லி கட்டளை விடுத்தார் இதை ஏற்றுக்கொண்ட கணேசன் அந்த அசுரனை அழித்து விட்டான் எனவே இவருக்கு கணேசன் அல்லது கணபதி என்ற பெயர் வரக் காரணம் ஆகும் இந்த பெயரின் பொருள் என்னவென்றால் அனைத்து கணங்களின் தலைவன் என பொருளாகும்
லம்போதர அவதாரம்
இந்த அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு அசுரன் மிகவும் கோபமான நிலையிலேயே காணப்படுவான் அவன் மக்களை அதிகம் வதம் செய்து வந்துள்ளான், இந்த அசுரன் சூரிய பகவானிடம் அருள் பெற்றதால் அவனை எதிர்த்து யாரும் போரிட முடியாது, கணபதி இந்தக் கோபத்தில் இருக்கும் அசுரனை சாந்தப்படுத்தி உள்ளான்.எனவே லம்போதர அவதாரம் என பெயர் வரக் காரணம் ஆனது
துண்டி விநாயகர் அவதாரம்
இந்த அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த பூமியிலுள்ள அசுரனை அழிக்க பார்வதி தேவியின் அருளால் பிறந்த குழந்தை விநாயகர் என்பதினால் இந்த அவதார விநாயகருக்கு துண்டி விநாயகர் என பெயர் வரக் காரணம் ஆகும்
வல்லபை விநாயகர்
இந்த அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்வதற்காக விநாயகர் எடுத்த அவதாரம் தான் வல்லபை விநாயகர் அவதாரம் என அழைக்கப்படுகிறது
விநாயகரின் மனைவிகள்
விநாயகரின் கல்யாணத்தைப் பற்றி இந்தியாவில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன மேலும் புராணங்களில் ரண்டு விதமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன நம் தமிழகத்தில் பொதுவாக விநாயகர் திருமணம் செய்யாத ஒரு கடவுளாக நாம் அனைவரும் வணங்கி வருகின்றோம். ஆனால் வட இந்தியாவில் விநாயகருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறுகின்றனர் ,
வட இந்தியாவைப் பொருத்தவரை விநாயகரின் மனைவியாக
விஸ்வகர்மா அவருடைய இரண்டு அழகான மகள்களான ரித்தி மற்றும் சித்தி ஆகிய இருவரையும் திருமணம் செய்ததாக வட இந்திய புராணங்கள் தெரிவிக்கின்றன . மேலும் விநாயகரின் இரண்டு மனைவிகளான சித்தி மற்றும் ரித்தி ஆகியோர்களுக்கு சந்தோஷிமாதா , சுபா ,லாப ஆகிய குழந்தை பிறந்ததாக கூறுகின்றனர். நம்ம ஊரு புராணப்படி விநாயகருக்கு கல்யாணம் ஆகவில்லை என்று கூறுகின்றனர்.