சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மறை நீர் (Virtual Water)..!
மறை நீர் என்பது கண்னுக்கு தெரியாத ஒரு பொருளுக்கு ஒளிந்திருக்கும் நீர் மறை நீர். அதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்ய குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேவை படும் அந்த பொருள் முழுமை பெற்ற பிறகு அதற்கான உபயோகபடுத்திய தண்ணீர் அதில் இருக்காது. அதில் மறைந்திருக்கும் இதுவே மறை நீர் எனப்படும். இது பொருளாதாரத்தின் ஒரு தத்துவம் ஆகும். இது பொருளாதரத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்றால் உதாரணத்துக்கு ஒரு பொருள் உற்பத்தி செய்ய 100 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்றால் அந்த பொருளை ஒரு நாடு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும்போது 100 லிட்டர் தண்ணி செலவு செய்யப்படுகிறது, இதுவே ஒரு நாடு அந்த பொருளை இயக்குமதி செய்யும்போது அந்த நாடு 100 லிட்டர் தண்ணீரை சேமிக்கிறது. இதுவே பொருளாதாரத்தில் குறிப்பிடுவதாகும் ஆகும்.
நமது நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஆனது பெரும்பாலான இடத்தில இருக்கிறது. அதேபோல் நமது நாட்டில் உள்ள மக்கள்தொகைக்கு தண்ணீரின் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. மறை நீர் பற்றிய புரிதலும் இங்கு இருக்க வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சியை மொத்த உள்நட்டு உற்பத்தியை கணக்கிடுவதில் தான் இருக்கும் ஆனால் உற்பத்திக்கு செலவிடப்படும் தண்ணீரின் அளவை கணக்கிடுவதும் இல்லை அதற்கான செலவையும் கணக்கிடுவதும் இல்லை. இது இந்தியா போன்ற பெரும்பாலான நடுகள் செய்வது இல்லை..
சில நாடுகளை நீரின் அவசியத்தையும் பொருளின் தேவையும் துல்லியமாக அறிந்து அதற்கு ஏற்றாற்போல் இறக்குமதி ஏற்றுமதி இருக்கும் நீரின் தேவை அதிகம் உள்ள நாடுகள் நீர் அதிகம் செலவு செய்து தயாரிக்கும் பொருட்களை உற்பத்தி செய்வதில் கட்டுப்பாடுகளின் அதே இறக்குமதி செய்ய எந்த கட்டுப்பாடுகளும் இல்லை..
இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இங்கு பண்ணட்டு நிறுவனம் இங்கு தொழிற்சாலை அமைத்து தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இதற்கு முக்கியமான இரண்டு கரணங்கள் அதில் ஒன்று தொழிலாளர்கள். இங்கு மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தொழிலாளர் கூலி குறைவு இதனால் இங்கு தொழிற்சாலை அமைகின்றன அதோடு முக்கியம் இங்கு தண்ணீருக்கு செலவு இல்லை. இங்கு ஒரு கார் தயாரிக்க 4,00,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதுவே அவர்ககத்து நாட்டில் இந்த தண்ணீருக்கு அவர்கள் பணம் அல்லது வரி செலுத்த வேண்டி இருக்கும் அதனால் அவர்கள் இந்தியாவை தேர்ந்தெடுக்கின்றன இதனால் இது இந்தியாவில் பெரும் பாதிப்பை பின்னாளில் ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றன.
நமது நாட்டில் சில பொருட்கள் தயாரிப்பதில் உலகளவில் முன்னோடியாக உள்ளனர் ஆனால் விஞ்ஞானத்தில் மற்றும் அறிவியலிலும் முன்னோடியான நாடுகள் பொருள் உற்பத்தியில் பெரும்பாலும் மற்ற நாடுகளை சார்ந்து இருப்பது குறிப்பாக இந்தியாவை சார்ந்து இருப்பதற்கு முக்கிய காரணம் நீரின் அவசியம் அறிந்து அதை அனைத்தும் இறக்குமதி செய்கின்றன. முன்பு ஏற்றுமதி செய்வது ஒரு நாட்டுக்கு பொருளாதாரத்துக்கு வளர்ச்சியாக கருதப்பட்டாலும் தற்போது இறக்குமதி செய்வது தான் சிறந்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றன. அல்லது உற்பத்தி உள்நாட்டு மக்களுக்கு பயன்படும் விதமாக இருக்கவேண்டும்.
சில நாடுகளில் மறை நீர் ஏற்றுமதி இறக்குமதியை விட குறைவாக இருப்பது சிறந்தது ஆனால் இந்தியாவில் மறை நீர் ஏற்றுமதி, இறக்குமதியை விட மிக அதிமாக உள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு நீரை அனுப்புவது கடினம் ஆனால் பொருட்களை அனுப்புவது சுலபம் இது தான் மறை நீர். இதே நிலைமை தொடர்ந்தால் வறட்சி அதிகரிக்கும் அது மட்டும் இன்றி நாம் கொடுத்த நீர் நமக்கு மீண்டும் கிடைப்பது முடியாத சாத்தியம் இல்லை மேலும் நம்மால் தண்ணீரை எங்கும் உற்பத்தி செய்ய முடியாது.