சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
யார் இந்த சவுக்கு சங்கர் | Who is Savukku Sankar ? in Tamil
சவுக்கு சங்கரின் இயற்பெயர் ஆச்சி முத்து சங்கர் இவர் 10ம் வகுப்பு பயின்று வந்தபோது எதிர்பாராத விதமாக இவரது தந்தை இறந்துவிட்டார்.
இதனால் இவர் தந்தை பார்த்து வந்த வேலையை இவருக்கு கொடுத்தனர் இவரது தந்தை லஞ்சஒழிப்பு துறையில் பணிபுரிந்தவர். இவர் சிறு வயதில் இருந்து புத்தக வாசிப்பு மீது அதிக ஆர்வம் உள்ளதால் இவர் வாங்கும் சம்பளத்தில் பெரும் பகுதியை புத்தகம் வாங்குவதில் செலவு செய்தார்.
இவர் பணிகளில் மிகவும் நேர்மையாக இருந்தார் இதேபோல் தனது துறையில் உள்ள உயரதிகாரிகளின் ஊழலை வெளிக்கொண்டுவர சில தொலைபேசி ஆடியோக்களை வெளியிட்டார்.
இதனால் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது இதில் இவர் தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்படுகிறது 2008ம் ஆண்டு இவர் சிறைக்கு செல்கிறார் இதனால் இவரது அரசு பனி பறிபோனது.
சவுக்கு சங்கரின் அரசியல் பயணம்
இந்த வழக்கு மூலம் இவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் சிறையில் பெரும் அவஸ்த்தைகளை அனுபவித்தார் என்று அவரே தெரிவித்தார் பிறகு சிறையில் இருந்து வெளிவந்தவர். சிறை சென்று வந்தவுடன் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை மற்றும் சிறை சென்று வந்துவிட்டோம் என்கிற தைரியமும் இவரை இணையத்தில் நாடா செய்தது பிறகு சவுக்கு என்னும் youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனது கருத்துக்களை பதிவிட்டு வந்தார் இவர் மீது பெரிதும் வைக்கப்பட் விமர்சனம் என்னவென்றால் இவர் விமர்சிப்பவரை ஒருமையில் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியும் விமர்சிப்பது இவரது எதிரிகள் மட்டுமின்றி இவரது ரசிகர்களும் முகம் சுளிக்கின்றன. ஏன்னெனில் ஒரு மூத்த பத்திரிகையாளர் இவரு நடந்துகொள்வது பின்வரும் தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதலாக இருக்கும் என்று வருத்தம் தெரிவிக்கின்றன.
சவுக்கு பெயர்காரணம்
இவர்க்கு சவுக்கு என்று பெயர் சூடியவர் இவரது தயார் இவர் சிறைவாசம் சென்று வந்த பிறகு இவர் கேக்கும் கேள்விகள் அனைத்தும் எதிரிகளின் மீது சவுக்கடி போல் இருக்கவேண்டும் என்று கூறி இவரது தயார் இந்த பெயரை சூட்டினார்.
சவுக்கு சங்கர் எழுதிய புத்தகம்
சவுக்கு சங்கர் தனது அனுபவத்தில் புத்தகங்களை எழுதியுள்ளார் இவர் தனது சிறையில் சந்தித்த மோசமான அனுபவங்கள் மற்றும் பல செய்திகளை புத்தகத்தில் எழுதியுள்ளார், இவர் எழுதிய புத்தகங்கள் என்னவென்றால் ஊழல் உளவு அரசியல், மோடி மாயை, வேள்வி மற்றும் இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் போன்ற புத்தகத்தை எழுதியுள்ளார்