சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பெண்களின் உடல் எடையை அதிகரிக்க(women’s weight gain)..!
பெண்கள் தனது உடல் எடையை சரியாக பராமரிக்க தவருகின்றனர். சிலர் உடல் பருமனாக இருப்பது பெரும் பிரெச்சனையாக பார்க்கின்றனர். அதேபோல் தான் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக இருப்பதும் பின் உடல் மிக பருமானக இருப்பதும் பின்னாளில் பிரச்சனை உண்டாகும். இதை நாம் சிறு வயதில் இருந்ததே நாம் இதை கவனிக்க வேண்டிய விசயமாகும் சிறு வயதில் இருந்ததே உடல் எடை கூடாமல் இருப்பது இளங்காசம் என்னும் பிரைமரி காம்பிளக்ஸ் எனப்படும். இதை நாம் சிறு வயதில் கவனிக்காமல் இருப்பது பின்னாளில் எப்போதும் மெலிந்து இருக்கக்கூடும். இவர்கள் என்னதான் உணவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடாது. இதற்கன உணவு முறை மூலம் கூட நாம் சரி செய்து கொள்ளலாம். அல்லது மேலும் தேவைப்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.
அதிக புரதசத்து உள்ள உணவுகளை உண்பது சிறந்தது அது தான் விரைவில் உடல் எடையை அதிகரிக்க உதவும். மேலும் சைவம் சாப்பிடும் நபர்களுக்கு இந்த பொருட்களை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடலாம்.
வாழைப்பழம் ஓர் நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேல், முந்திரி தினமும் ஒரு கையளவு, உலர்திராட்சை ஒரு கையளவு மேலும் நாம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டியவை பன்னீர் அல்லது பட்டர், பாஸ்தா, பீன்ஸ், உருளைகிழங்கு, சேனைக்கிழங்கு, தேங்காய்ப்பால், பாதாம் பருப்பு, ஆளி விதை இவைகளை உடல் மெலிந்தவர்கள் தங்களது உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் தரும். மேலும் உளுந்து மற்றும் எள்ளு போன்ற விசயங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதும், பசும்பால் மற்றும் பசுநெய் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவும்.
அசைவம் விரும்பிய சாப்பிடுபவர்களுக்கு..
மீன், இறால், கோழியின் நெஞ்சுக்கறி, முட்டை அல்லது முட்டையின் மஞ்சள்கரு இவைகளை உடல் மெலிந்தவர்கள் தங்களது உணவின் பழக்கத்தில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடல் எடையை கூட்டுவதற்கு உதவியாக இருக்கும்.
உடல் எடை கூடாமல் மெலிந்து இருப்பது சிலருக்கு நன்மை என்றுபட்டாலும் அதை மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கான காரணத்தை கண்டறிவது அவசியம் இதனால் ஊட்டசத்து குறைபாடு மற்றும் புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது எனவே மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவையானது.